2012, ஜூனில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய ஆசிரியர் கல்வி தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் சான்றுகள் வழங்கப்படுகிறது. அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம். பட்டயச் சான்றிதழை பெற, 04-04-2013ம் தேதிக்குள், இந்த அலுவலகங்களை, நேரிலோ, தபால் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
மறுகூட்டல் விண்ணப்பத்தேதி
03-04-2013 முதல் 05-04-2013 வரை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் 5-04-2013 தேதிக்குள் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நேரில் சமர்பிக்க வேண்டும்.




























































